நேரக்கட்டுப்பாடு: அதிகபட்சம் 5 நிமிடங்கள் பேசலாம்.
தடைகள்: தனிநபர் தாக்குதல், ஆதாரமற்ற தகவல்கள், சபை நாகரீகமற்ற சொற்கள் ஆகியவற்றைப் பேச அனுமதி இல்லை.
அனுமதி கடிதம்: சட்டமன்ற அளவிலான போட்டியில் கலந்துகொள்வதற்கு கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி கடிதம் அவசியம்.
அடையாள அட்டை: போட்டிகளின் போது கல்லூரிகளின் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டியது அவசியம்.
பரிசு: சட்டமன்ற அளவில் முதல் மூன்று இடம்பிடிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசும், கேடயமும், சான்றிதழும் அளிக்கப்படும். முதலிடம் பிடிப்பவர் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் தகுதி பெறுவார். மண்டல அளவில் வெல்பவர் மாநில அளவிலான இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவார். இறுதிச் சுற்றில் வெல்பவர் ரூ.5,00,000/- பரிசும் சுழற்கோப்பையும் பெறுவார்.
மதிப்பீடு: கருத்து - 10 மதிப்பெண்கள்; மொழி - 10 மதிப்பெண்கள்; நடை (பேசுகிற பாங்கு / பிரசண்டேசன்) - 10 மதிப்பெண்கள்; என மொத்தம் 30 மதிப்பெண்கள் அடிப்படையில் பரிசுக்குரியவர் தேர்வு செய்யப்படுவார்.