சமூக நீதி

சமூக நீதி

சமூக நீதியிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் ஒரு குடும்பத்தில் முதல் பட்டதாரி படிக்கும் மாணவ, மாணவியரின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்தார்.

அரசு கல்லூரிகளை விட தனியார் கல்லூரிகள் அதிகமுள்ளதால்,இதன்மூலம் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் பொருளாதார இதன் மூலம் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் பொருளாதாரச் சிக்கலால் படிக்க முடியாமல் தவித்த மாணவர்களுக்கு பேருதவியாக அமைந்தது.

அமெரிக்காவில் ஜோ பைடன் அங்குள்ள மாணவர்களின் கல்விக் கடன் அல்லது வட்டி சுமையை எவ்வாறு குறைக்கலாம் என முயற்சி செய்யும் வேளையில், ஒரு நாட்டில் உள்ள ஒரு மாநிலத் தலைவர் அதை நடைமுறைப்படுத்திக் காட்டினார்.

மேலும் அருந்ததியர் உள் ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டின் மூலமும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அனைத்து பிரிவினருக்கும் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி சாத்தியமானதால் சமூக நீதி தமிழ் நாட்டில் மலர்ந்தது.