தொழில் வளர்ச்சி

தொழில் வளர்ச்சி

அதிகமான கிராமப்புற மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளைத் தேர்ந்தெடுத்ததால் அதிகமான பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் தோன்றின. இது ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.

இந்த பொறியியல் மாணவர்கள் வளைகுடா போன்ற பல்வேறு நாடுகளில் பொறியியல் வல்லுனர்களாக பணி புரிகின்றனர். ஏறக்குறைய இந்த இருபத்திரண்டு ஆண்டுகளில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. அனைத்து தொழில் வளர்ச்சி குறியீடுகளிலும் தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளதன் மிக முக்கிய காரணம் நாம் தரமான தொழில்முறை பொறியாளர்களை உருவாக்கியது.

ஏறக்குறைய ஒன்றரை இலட்ச பொறியாளர்களை ஒவ்வொரு ஆண்டும்  இங்கே உருவானதால்  நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொறியாளர்களை தமிழகத்தில் பெற்றதால் வெளியூர்களில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

முக்கியமாக டெட்ராய்ட் ஆப் இந்தியா சென்னையில் உருவாக காரணமான கார் தொழிற் சாலைகளும், உதிரிபாக தொழிற்சாலைகளும் தங்களுக்கு தேவையான பொறியாளர்களை இங்கே இருந்தே பெற்றன. 

இதன் மூலம் தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது.