அக்காலத்தில் எளிய மக்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் எட்டாத ஒன்றாக இருந்தது. அந்தப் படிப்பைப் பெறுவது அவர்களுக்கு ஒரு வாழ்நாள் குறிக்கோளாக இருந்தது. 1996 – 2000 ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூட கிராமப்புற மாணவர்களுக்கு மேற்கண்ட கல்வி சாத்தியமில்லாததாக இருந்தது.
கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்கள் பன்னிரண்டாம் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றனர், ஆனால் கல்விப் பின்னணியில் உள்ள நகர்ப்புற மாணவர்களுடன் நுழைவுத் தேர்வில் போட்டியிட முடியாமல் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் இருந்தாலும் சேர முடியவில்லை.
இது கல்விப் புரட்சியை உருவாக்கியது.